மேடை ஏறினால் என்ன வேண்டுமானாலும் பேசுவதா? நடிகர் விஜய்க்கு கனிமொழி எம்.பி. கேள்வி!!

 
kanimozhi

மேடை ஏறினால் என்ன வேண்டுமானாலும் பேசுவதா என்று நடிகர் விஜய்க்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் நடிகர் விஜய் பேசிய கருத்துக்கள் தமிழ்நாடு அரசியலில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மணிப்பூர் கலவரத்தைப் பேசுகிறவர்களுக்கு வேங்கைவயல் தெரியவில்லையா என்று விஜய் கேட்டிருந்தார்.

மணிப்பூர் கலவரத்தை வேங்கைவயல் பிரச்சனையை ஒப்பிட்டுப் பேசுவதா என்று சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

இது குறித்து கனிமொழி எம்.பி.யிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, “ மணிப்பூருக்கு நான் போயிருக்கிறேன். எத்தனை பேர் போயிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. மணிப்பூரையும் தமிழ்நாட்டையும் ஒப்பிட்டுப் பேசுவது என்பது மேடையேறினால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைக்கக்கூடிய  ஒன்றாகத் தான் இருக்கிறது. இது சரியானது அல்ல” என்று கூறியுள்ளார்.

தவெக மாநாட்டிற்குப் பிறகு மேடையில் பேசிய முதல் நிகழ்ச்சியிலேயே கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளார் நடிகர் விஜய். அரசியல் களத்தில் அவருக்கு முதிர்ச்சியில்லை என்பதையே இது காட்டுவதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதைப் போல் தொடர்ந்தால் அவருடைய அரசியல் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வியையும் முன் வைக்கின்றனர்.

From around the web