தமிழ்நாட்டில் பாஜக வை காலூன்ற விடமாட்டேன்! வைகோ சபதம்!!
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி செய்தியாளர்களை சந்தித்தார் மதிமுக தலைவர் வைகோ. ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு நாளில் செய்தியாளர்களை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் வைகோ.
25வது ஆண்டாக புத்தாண்டு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வைகோ 2026லும் திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக தொடர்வார் என்று தெரிவித்தார்.
விவசாயிகள், தொழிலாளர்கள், மகளிர், மாணவர்கள், மாணவிகள் என அனைத்துத் தரப்பு மக்களுக்குமான புதிய புதிய திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். மற்ற மாநில முதலமைச்சர்களும் நம்முடைய மாநிலத் திட்டங்களை பின்பற்றி செயல்படுத்தி வருகிறார்கள்.மக்கள் ஆதரவுடன் மீண்டும் திமுக தலைமையிலான கூட்டணி 2026 சட்டமன்றத்தேர்தலில் வெற்றி பெறும் என்று வைகோ கூறியுள்ளார்.
மேலும் தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற விடமாட்டேன் என்றும் சபதம் எடுத்துள்ளார் வைகோ.