தேர்தலில் போட்டியிட போவதில்லை.. திமுக கூட்டணியில் ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்கீடு - நடிகர் கமல்ஹாசன் பேட்டி

 
Kamalhasan - Udhayanidhi

நாடாளுமன்ற தேர்தலில் நான் போடியிட போவதில்லை என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை முடிவுகளை வேகமாக எடுத்து வருகின்றன. இந்த தேர்தலையொட்டி திமுக - மார்க்சிஸ்ட் இடையே நடந்த தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே திமுக 2 தொகுதிகளின் பங்கீடு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மீண்டும் ராமநாதபுரத்தில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளது. திமுக கூட்டணியில் ஐ.யூ.எம்.எல் கட்சி சார்பாக மீண்டும் ராமநாதபுரம் தொகுதியில் ஏணி சின்னத்தில் நவாஸ் கனி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Kamalhasan - Udhayanidhi

அதேபோல் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மீண்டும் நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த தொகுதி எம்பியாக அந்த கட்சியின் ஏகேபி சின்ராஜ் உள்ளார். ஆனால் புதுமுகத்துக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று உங்கள் கட்சியிலேயே முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் சந்தித்து பேசினார். அப்போது, இந்த தேர்தலில் திமுக, கூட்டணியை ஆதரித்து கமல் பிரசாரம் செய்வது எனவும், 2025-ம் ஆண்டில் நடக்கும் ராஜ்யசபா சீட்  மக்கள் நீதி மய்யத்திற்கு வழங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

Kamalhasan - Udhayanidhi

இதன் பிறகு கமல் நிருபர்களிடம் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தலில், நானும் எனது கட்சியும் போட்டியிடவில்லை. திமுக கூட்டணிக்கு என்னுடைய அனைத்து ஒத்துழைப்பும் இருக்கும். பதவிக்காக விஷயம் இல்லை. நாட்டிற்காக சேர்ந்துள்ளோம் என்று கூறினார்.

From around the web