மனைவிக்கு வீட்டில் வைத்து பிரசவம் பார்த்த கணவர்.. சென்னையில் பரபரப்பு

 
Chennai

குன்றத்தூரில் மனைவிக்கு வீட்டிலேயே கணவர் பிரசவம் பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி சுகன்யா. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இப்போது மனோகரன் தனது மனைவி, குழந்தைகளுடன் சென்னை குன்றத்தூர் அருகே நந்தம்பாக்கத்தில் வசித்து வருகிறார். சமீபத்தில் சுகன்யா 3வது முறையாக கர்ப்பம் ஆனார். அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

Baby

இந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சுகன்யாவுக்கு இன்று திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது வீட்டில் இருந்த மனோகரன், சுகன்யாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் வீட்டிலேயே வைத்து பிரசவம் பார்த்துள்ளார். இதில் சுகன்யாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதற்கிடையே, சுகன்யாவுக்கு அவரது கணவரே வீட்டில் வைத்து பிரசவம் பார்த்த தகவல் வேகமாக பரவியது. இதையடுத்து உடனடியாக சுகாதாரத்துறையினர் மனோகரன் வீட்டுக்கு வந்தனர். அப்போது சுகன்யா மற்றும் குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அதிகாரிகள், சம்பவம் தொடர்பாக குன்றத்தூர் போலீசில் புகார் செய்தனர். மனோகரன் மீது புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் மனோகரனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Kundrathur

வீட்டில் வைத்து பிரசவம் பார்க்கும்போது பெண்ணின் உயிருக்கும், குழந்தைக்கும் ஆபத்து என்பது ஏற்படும். இதனால் பிரசவத்தின்போது பெண்ணை மருத்துவமனையில் அனுமதிப்பது தான் சிறந்தது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து அறிவுரைகளையும், விழிப்புணர்வுகளையும் வழங்கி வருகிறது. ஆனால் அதையும் மீறி மனோகரன் தனது மனைவி சுகன்யாவுக்கு வீட்டில் வைத்தே பிரசவம் பார்த்துள்ளதால் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

From around the web