தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட கணவர்.. மனைவியின் தகாத உறவால் நிகழ்ந்த சோகம்

 
Palamedu

மதுரை அருகே மனைவியின் தகாத உறவால் மனமுடைந்த கணவர், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியை சேர்ந்தவர் பொன்வேந்தன் (35). இவர் சென்னையில் கால் டாக்சி ஓட்டி வந்தார். இவரது மனைவி முத்துபிரியா (30). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். முத்துபிரியா பாலமேட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். அப்போது அவருக்கும், வேறு ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

Fire

இதை அறிந்த பொன்வேந்தன் மனைவியை கண்டித்துள்ளார். இதையடுத்து முத்துபிரியா மகன்களையும், காதல் கணவரையும் விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடிவிட்டார். இதனால் மனமுடைந்த பொன்வேந்தன் சம்பவத்தன்று பாலமேடு காவல் நிலையம் அருகில் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். 

அங்கிருந்த போலீசாரும், அப்பகுதி மக்களும் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி பொன்வேந்தன் பரிதாபமாக உயிரிழந்தார். 

dead-body

இதுகுறித்து பாலமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கள்ளக்காதலனோடு தாய் சென்றநிலையில், தந்தையும் தீக்குளித்து உயிரிழந்ததால் 3 குழந்தைகளும் பரிதவித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

From around the web