ரயிலில் தொங்கிய மனித உடல்.. திகில் சம்பவம்.. அரண்ட பயணிகள்!

 
Pothigai

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலின் என்ஜின் முகப்பில் இறந்த நிலையில் சிக்கி இருந்த மனித உடலை கண்டு பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கோட்டை - சென்னை வரையில் செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று (அக். 15) மாலை வழக்கம் போல் செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு இரவு சுமார் 9.30 மணிக்கு மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் மதுரை ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலின் என்ஜின் முன் பகுதியில் மனித உடல் சிக்கி இருப்பதை பயணிகள் கண்டு உள்ளனர். 

pothigai

இந்த சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து ரயில்வே போலீசார் என்ஜினின் முன் பகுதியில் சிக்கி இருந்த உடலை அப்புறப்படுத்தி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் மதுரை கப்பலூர் பகுதியில் அடையாளம் தெரியாத ஒருவர் ரயிலில் தற்கொலை செய்ய முயன்ற போது என்ஜினின் முன் பகுதியில் உடல் சிக்கி இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. வேறு ஏதும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Madurai

இந்நிலையில், இச்சம்பவத்தால் பொதிகை ரயிலானது 45 நிமிடங்களுக்கு மேலாக மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இறந்தவரின் உடல் நீக்கப்பட்டதை அடுத்து ரயில் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் மதுரை ரயில் நிலையம் பகுதியில் சலசலப்பு நிலவியது.

From around the web