அசைவம் சாப்பிடுகிறவர்கள் முட்டாள் ன்னு சொன்னவரே ஒரு புடி புடிச்சா எப்படி?

 
Raama Srinivasan

தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான இராம சீனிவாசன் திருப்பரங்குன்றம் கோவில் பிரச்சனையின் போது அசைவம் சாப்பிடும் இந்துக்கள் முட்டாள் என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பாஜக தலைவர் அண்ணாமலை அசைவ உணவு சாப்பிடும் படங்களைப் பகிர்ந்து கேள்விகள் எழுப்பியிருந்தனர்.

இந்நிலையில் இராம சீனிவாசன் ஒரு ஹோட்டலில் அசைவ உணவு சாப்பிடும் வீடியோவை பகிர்ந்து அவரை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளனர் நெட்டிசன்கள். இந்த வீடியோ சமூகத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் இராம சீனிவாசனும் மற்றொருவரும் ஓட்டல் பணியாளரிடம் இந்த இது ஹலால் செய்யப்பட்டதா என்று கேட்க ஆமாம் என்கிறார். ஓட்டல் உரிமையாளர் இந்துவா முஸ்லிமா என்று கேட்கிறார்கள். இந்து என்று பணியாளர் பதிலளிக்கிறார். சாப்பிட வர்றவங்க யார் என்று கேட்க முஸ்லிம் இந்து என எல்லோரும் வர்றாங்க என்கிறார். அப்ப நாங்க ஏன் இதை சாப்பிடனும். ஒரு கிளாரிஃபிகேஷனுக்காக என்று சொல்லி முடிக்கிறார்.

கிளாரிஃபிகேஷனுக்காக இராம சீனிவாசன் கேட்டது அவருக்கு எதிராகவே தற்போது திரும்பியுள்ளது.


 

From around the web