அசைவ உணவு சாப்பிட்ட ஓட்டல் தொழிலாளி திடீர் மரணம்.. சங்கரன்கோவிலில் பரபரப்பு

 
Sankarankoil

சங்கரன்கோவிலில் ஓட்டலில் உணவு அருந்திவிட்டு தூங்கிய தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபகாலமாக அசைவ உணவை சாப்பிடுபவர்கள் திடீர் மரணமடைந்த நிலையில், சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வந்தனர். மேலும், தமிழ்நாட்டில் பல பகுதிகளில் அசைவ உணவகங்களில் உணவின் தரமும், காலாவதியான சிக்கன் உணவுகளையும் சூடு செய்து தருவதாக புகார்கள் எழுந்து வருகின்றனர்.

Sankarankoil

இந்த நிலையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஓட்டலில் உணவு அருந்திவிட்டு தூங்கிய தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள ஓட்டலில் தர்மலிங்கம் என்பவர் வேலை செய்து வந்தார். இந்த நிலையில், நேற்று இரவு பணிகளை முடித்துவுடன் தர்மலிங்கம் அசைவ உணவை உண்ட பிறகு உறங்க சென்றார். நீண்ட நேரமாகியும் தர்மலிங்கம் எழவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் அவரை எழுப்பியபோது படுத்தபடியே அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. தகவலறிந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web