கொளுத்தும் வெயில்... தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதி.. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

 
school

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் இறுதியில் ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிந்தன. இதனையடுத்து, தற்போது கோடை விடுமுறையில் மாணவர்கள் உள்ளனர். ஜூன் 1ம் தேதி 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

ஆனால், எந்த வருடமும் இல்லாத அளவுக்கு தற்போது கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவுகிறது. ஆகவே, பள்ளிகள் திறப்பு தாமதமாகலாம் என்ற தகவல்கள் வெளிவந்தன. இந்த தகவல்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

school

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ், “ஏற்கனவே திட்டமிட்டபடி தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் அதே தேதியில் திறக்கப்படும். ஜூன் 1ம் தேதி ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை திறக்கப்படும். ஜூன் 5ம் தேதி ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும்” என்று தெரிவித்தார்.

2023-24 ஆம் கல்வியாண்டு நாட்காட்டியின்படி, 11, 12ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 15ம் தேதி காலாண்டுத் தேர்வு தொடங்குகிறது. 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 18ம் தேதி காலாண்டுத் தேர்வு தொடங்குகிறது. தேர்வு முடிந்து விடுமுறைக்குப் பிறகு, அக்டோபர் 3ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 

Anbil-Mahesh

1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் 11, 12ம் வகுப்புகளுக்கும் டிசம்பர் 11ம் தேதி அரையாண்டுத் தேர்வு தொடங்குகிறது. அதேபோல டிசம்பர் 13ம் தேதி 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு முடிந்து விடுமுறைக்குப் பிறகு, ஜனவரி 2ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 

From around the web