டேய்.. 60 ஆண்டுகாலத்தில் தமிழ்நாட்டின் சிறந்த முதலமைச்சர் யார் தெரியுமா? அசத்தல் பதில் தந்த Grok AI!!

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ட்விட்டர் தளத்தை வாங்கி அதற்கு எக்ஸ் என்று பெயரிட்டு புதிய மாற்றங்களுடன் நடத்தி வருகிறார். டெஸ்லா நிறுவனத்தின் முதல் கார் மாடல் எக்ஸ் ஆகும். அதையே தன்னுடைய ப்ராண்ட் ஆக பிற தொழில்களுக்கும் உபயோகித்து வரும் மஸ்க், விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ஸ்பேஸ் எக்ஸ் என்றே பெயரிட்டுள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் தான் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஐ பத்திரமாக தரையிறக்கிய
எலான் மஸ்க் கின் அடுத்த அவதாரமாக உருவெடுத்துள்ளது Grok AI என்னும் செயற்கை நுண்ணறிவு செயலி. இதில் தமிழில் கேள்வி கேட்டால் அசத்தலாக பதில் சொல்கிறது. இன்றைய அரசியல் நிலவரம, வரலாற்றுத் தகவல்கள், வெளிநாட்டுச் செய்திகள் என எதைக் கேட்டாலும் சில நொடிகளிலேயெ ஆராய்ந்து விரிவான பதில்களைத் தருகிறது. Grok AI எக்ஸ் தளத்திலும் இருப்பதால், அதை டேக் செய்து கேள்வி கேட்டால் பதில் சொல்கிறது.
உலகம் முழுவதும் தமிழில் உரையாடும் நெட்டிசன்கள் Grok AI ல் பல்வேறு கேள்விகளை தமிழில் முன் வைக்கின்றனர். பாஜகவை பற்றி பல்வேறு உண்மைகளையும் புட்டுபுட்டு வைக்கிறது Grok AI.
இந்நிலையில் “டேய் தமிழ்நாட்டின் கடந்த 60 வருடத்தில் சிறந்த முதலமைச்சர் யார் டா?” என்று நண்பனிடம் கேட்பது போல் ஒருவர் எக்ஸ் தளத்தில் Grok AI யிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள Grok AI ம் நண்பனுக்கு பதில் சொல்வது போலவே கூறியுள்ளது. அந்தப் பதிலில்,
“டேய்! கடந்த 60 வருஷத்துல தமிழ்நாட்டோட சிறந்த முதலமைச்சர் யாருனு பார்த்தா, மு. கருணாநிதி தான் முன்னிலையில இருக்காரு—19 வருஷம் 5 தடவை ஆட்சி, தமிழ் பண்பாடு, அரசியலுக்கு பெரிய பங்களிப்பு. ஆனா, ஜெ. ஜெயலலிதா (வெல்ஃபேர் திட்டங்கள்), எம்.ஜி.ஆர் (மக்கள் செல்வாக்கு), சி.என். அண்ணாதுரை (திராவிட இயக்க முன்னோடி)னு எல்லாருக்கும் ரசிகர்கள் உண்டு. "சிறந்தவர்"னு சொல்றது சப்ஜெக்டிவ், ஆனா கருணாநிதி டாப் சாய்ஸா தெரியுது!” என்று கூறியுள்ளது Grok AI.
டேய்! கடந்த 60 வருஷத்துல தமிழ்நாட்டோட சிறந்த முதலமைச்சர் யாருனு பார்த்தா, மு. கருணாநிதி தான் முன்னிலையில இருக்காரு—19 வருஷம் 5 தடவை ஆட்சி, தமிழ் பண்பாடு, அரசியலுக்கு பெரிய பங்களிப்பு. ஆனா, ஜெ. ஜெயலலிதா (வெல்ஃபேர் திட்டங்கள்), எம்.ஜி.ஆர் (மக்கள் செல்வாக்கு), சி.என். அண்ணாதுரை…
— Grok (@grok) March 18, 2025
Grok AI ன் இந்தப் பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.