திரையில் ஹீரோ.. நிஜத்தில் தேசத்துரோகி? தவெக தலைவர் விஜய் நல்ல சம்பவக்காரர்!!

விஜய் நல்லா சம்பவம் செய்வார் என்பதற்கான இரண்டு உதாரணங்கள்
சம்பவம் 1:
2012-ம் ஆண்டு நடிகர் விஜய் இங்கிலாந்து நாட்டிலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் காரை இறக்குமதி செய்தார். ஆனால், இதற்கான 'நுழைவு வரியை' அவர் செலுத்த வில்லை. இந்த வரியை செலுத்த வணிக வரி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர்.
"நான் எதுக்கு வரி செலுத்த வேண்டும்? நான் யார் எனக் காட்டுகிறேன்" என கோபப்பட்டு நுழைவு வரிக்கு தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு போட்டார். ஆனால், அந்த மனுவில் தன்னுடைய 'நடிகர்' தொழிலை அவர் குறிப்பிடாமல் மறைத்து விட்டார்.
இந்த வழக்கை விசாரித்தவர் நீதிபதி சுப்பிரமணி. அவர், "மனுதாரரின் தொழில் என்ன"? எனக் கேட்க, அதற்கு விஜய் வழக்கறிஞர் "நடிகர்" என வாய்வழியாக கூறியுள்ளார். "நுழைவு வரியை செலுத்த மாட்டேன் எனக் கூறியது மட்டுமில்லாமல் அவருடைய தொழிலையும் நீங்க மறைக்கிறீர்கள். உச்ச நடிகராக இருக்கும் விஜய் படத்தில் மட்டும் தான் ஹீரோவாக இருப்பாரா.? நிஜத்தில் ஹீரோவாக இருக்க மாட்டாரா.?
வரி என்பது விஜய் அளிக்கும் நன்கொடை இல்லை. அவர் விருப்பத்திற்கு கொடுக்க முடியாது என மறுப்பதற்கு. அது அரசுக்கு கட்டாயம் செலுத்த வேண்டியது என விஜய்க்கு தெரியாதா? வரி செலுத்தாமல் தவிர்ப்பது தேச துரோகம். இந்த குற்றத்திற்காக அபராதம் உண்டு.விஜய்க்கு 1 லட்சம் அபராதம் விதிக்கிறேன். இதனை தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு 2 வாரங்களில் செலுத்த வேண்டும்" என நீதிபதி தீர்ப்பளித்தார்.
சம்பவம் 2:
2015-ல் 'புலி' படத்திற்கு வாங்கிய சம்பளத்தில் வருமானத்தில் காட்டாமல் 15 கோடியை சார் மறைத்ததை வருமான வரித் துறையினர் கண்டுபிடித்தனர். இந்த விவகாரம் தான் 'மாஸ்டர்' பட ஷூட்டிங் போது அவர் ஐ டி அதிகாரிகளால் காரில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். விஜய் வீட்டில் நடத்திய சோதனையில் அவர் 15 கோடிக்கு வரி செலுத்தாமல் தேசத் துரோகம் செய்தது நிரூபனமானது. இந்த குற்றத்திற்காக விஜய்க்கு 1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
இதே விவகாரத்தில் 'புலி' பட தயாரிப்பாளரான பிடி செல்வக்குமார் வீட்டில் சோதனை செய்ய தீர்மானித்தபோது அவர் பயந்து ஓடி பாஜக கட்சியில் சேர்ந்துக் கொண்டார். ஆக, நடிகர் விஜய்க்கு இப்படி ஒரு தேச துரோக வரலாறு(கள்) இருக்கிறது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
திரையில் ஹீரோவாகவும், நிஜத்தில் தேசத் துரோகியாகவும் இருக்கும் விஜய் அவர்களே, நீங்கள் திமுக அரசை குறை கூறலாமா?
- ஆர்.ரகுபதி