தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்தில் கனமழை.. வானிலை மையம் அலர்ட்!

 
Rain

தமிழ்நாட்டில்  7 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (செப் 5) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.

Rain

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

வடகிழக்கு வங்கக்கடலில் காற்று சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடலை ஒட்டிய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மீண்டும் வலுப்பெறும். தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை வாய்ப்பு அதிகரிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

Rain

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web