சென்னையில் தொடர் கனமழை.. சாலையை கடந்து சென்ற முதலை... வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!

 
Crocodile

பெருங்களத்தூர் - நெடுங்குன்றம் சாலையில் முதலை ஒன்று சாலையை கடக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘மிக்ஜம்’ புயல் எதிரொலியாக சென்னையில் இரவு முதலே சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரால், அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சென்னையில் மழை, புயலுக்கு நடுவே, பெருங்களத்தூர் - நெடுங்குன்றம் சாலையில் உள்ள வேலம்மாள் பள்ளி அருகில் முதலை ஒன்று சாலையை கடக்கும் காட்சி வெளியாகி உள்ளது. இது உண்மையான வீடியோ என்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Crocodile

சாலையில் ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கம் உள்ள பகுதிக்கு முதலை சென்றுள்ளது. மக்கள் அங்கே பைக்கில் செல்லும் நேரத்தில் அசால்ட்டாக இந்த முதலை கடந்து உள்ளது. அப்போது அங்கே ஒரு வாகன ஓட்டி செல்வதும் படம் பிடிக்கப்பட்டு உள்ளது. இதை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். அந்த முதலை அருகே இருக்கும் ஏரி பகுதிகளில் இருந்து வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இது தொடர்பாக வனத்துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார். அதில், சென்னையில் உள்ள பல நீர் ஆதாரங்களில் முதலைகள் ஏற்கனவே உள்ளன. புயல் மழை காரணமாக தண்ணீர் அதிகரித்துள்ளதால் ஒரு முதலை வெளியே வந்துள்ளது. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்று சென்னை பெருங்களத்தூர் ஏரி அருகே முதலை சாலையில் தென்பட்ட சம்பவத்தில் வனத்துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.


அந்த முதலை தண்ணீருக்குள் சென்றுவிட்டது. அது மீண்டும் சாலைக்குள் வர வாய்ப்பு இல்லை. தண்ணீர் அதிக அளவில் இருப்பதால் முதலை வெளியே வந்துள்ளது. அது மீண்டும் வெளியே வர வாய்ப்பு இல்லை. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. முதலைகளின் பாத்திகளை, செயல்பாடுகளை கண்காணித்து வருகிறோம், என்று முதலை சாலையில் தென்பட்ட சம்பவத்தில் வனத்துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

From around the web