ஆந்திரா கட்சிகளுடன் தான் கூட்டணி வைப்பார்! எடப்பாடி மீது டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!!

எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவை வைத்துக் கொண்டு, திமுக வெற்றி பெறுவதற்குத்தான் எடப்பாடி பழனிசாமி உழைத்துக் கொண்டிருக்கிறார் என்று டிடிவி தினகரன் கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.
அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி உருவாகும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்த நிலையில், இலங்கை கட்சிகளும் ஆந்திரா கட்சிகளும் தான் எடப்பாடியுடன் கூட்டணி சேர்வார்கள் என்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருக்கிறார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் டிடிவி தினகரன் இவ்வாறு கூறியுள்ளது பாஜக - அதிமுக கூட்டணி அமைவதில் சிக்கல் இருப்பதை தெரிவிப்பதாக உள்ளது. ஓ.பி.எஸ், டிடிவி தினகரன் ஆகியோரையும் கூட்டணியில் இணைக்க வேண்டும் என்ற பாஜகவின் நிபந்தனையை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை என்பதால் தான் டிடிவி தினகரன் ஆவேசப்பட்டுள்ளாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.