முதலமைச்சராக இருப்பதற்கு அருகதையற்றவர்! பொன் ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!!

 
Pon Radhakrishnan

கோவை வடக்கு மாவட்டம் சார்பில் ஒன்றிய பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார். முதலமைச்சராக இருப்பதற்கு அருகதையற்றவர் என மிகவும் கடுமையான வார்த்தைகளை உபயோகித்துள்ளார்.

அண்ணாசாலையைக் குறிப்பிட்டு அப்படிச் சொல்லியிருந்தால் முதலமைச்சராக இருக்க அருகதையற்றவர் என்று கூறியுள்ளார் பொன் ராதாகிருஷ்ணன். முதலமைச்சர் எந்த மேடையில் அப்படிச் சொன்னார் என்ற தகவல் இல்லை. ஆனால் துணை முதலைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான் முடிந்தால் அண்ணா சாலைக்கு வரச்சொல்லுங்கள் என அண்ணாமலைக்கு சவால் விட்டிருந்தார்.

ஏற்கனவே துணை முதலமைச்சரின் இந்தப் பேச்சுக்குஅதற்குப் பதிலளித்து ஏற்கனவே பொன் ராதா கிருஷ்ணன் அண்ணாசாலை என்ன ரெட் லைட் ஏரியாவா என்று கொச்சையாக கேட்டிருந்தார். பாஜகவின் மூத்த தலைவர், முன்னாள் தமிழ்நாடு பாஜக தலைவர், முன்னாள் ஒன்றிய இணையமைச்சர் என பழுத்த அரசியல்வாதியான பொன் ராதாகிருஷ்ணனி சமீபத்திய பேச்சு ஏன் இப்படி அருவருக்கத்தக்க வகையில் இருக்கிறது என்று தெரியவில்லை!

From around the web