விஜய் க்கு பயம் தெளிந்து விட்டதா? பாஜக போக்கில் மாற்றமும் அதிமுக தரப்பில் உற்சாகமும் ஏன்?
கரூர் துயரச் சம்பவத்திலிருந்து பாஜக தான் காப்பாற்ற முடியும். அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர வேண்டும் என்று உயிரிழந்தவர்களுக்கு இறுதிச் சடங்கு நடப்பதற்கு முன்னதாகவே பாஜக தரப்பினர் குரல் எழுப்பினர். பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடப்பதாகவும், மற்றொரு பக்கம் காங்கிரஸுடனும் பேசுவதாகவும் தகவல்கள் வெளியாகின. கரூர் சம்பவத்திற்கு சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று தவெகவும் பாஜகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில் இரு தரப்பும் உச்சநீதிமன்றத்திலும் மனு செய்துள்ளனர்.
இந்நிலையில், விஜய் க்கு ஓரளவு அரசியல் தெளிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.பாஜக அல்லாத அதிமுகவுடன் கூட்டணி சேரலாம். பாதிப் பாதி தொகுதிகளில் போட்டியிடலாம், அதிக தொகுதிகளை வெல்லும் கட்சிக்கு முதலமைச்சர் பதவி என்று அதிமுகவுக்கு தகவல் சொல்லப்பட்டுள்ளதாம். இந்த டீல் எடப்பாடி பழனிசாமிக்கு உடன்பாடு தானாம். பஸ் பயணத்தில் மக்கள் நம்ம பக்கம் இல்லை என்பதை எடப்பாடி பழனிசாமி தெரிந்து கொண்டதால், பாஜக வாக்குகளை விட தவெக வாக்குகள் மட்டுமே வந்தால் வெற்றி பெற்றுவிடலாம் என்று எண்ணுகிறாராம்.
மக்கள் மத்தியில் எந்த மாதிரியான ரியாக்ஷன் இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளத்தான் தவெக கொடி பறக்க விடப்பட்டதாம். த்வெக கொடியை பறக்கவிட்டது அதிமுக தொண்டர் தான் என்பதும் உள்ளூர் நிர்வாகி ஏற்பாடு தான் அது என்றும் தெரியவந்துள்ளது.
அசைக்க அசைக்க அம்மியும் நகரும் என்பது போல, விஜய் யின் மனசை கரைக்க அதிமுக முயற்சி செய்கிறது. ஆனால், விஜய் தரப்பிலிருந்து இறுதி முடிவு தெரிந்த பிறகு தான் எடப்பாடி பழ்னிசாமியின் அடுத்த நடவடிக்கை இருக்குமாம். அது பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறுகிறோம் என்ற அறிவிப்பாகக் கூட இருக்கலாம்.
சில நாட்களாக பாஜக தரப்பினர் விஜய் பற்றி எந்த உற்சாகமும் காட்டவில்லை. அண்ணாமலை வெளிப்படையாகவே தெரிவித்து விட்டார். நயினார் நாகேந்திரன் 41 பேரை தாக்கி படுகொலை செய்தார்கள் என்று கடுமையாகப் பேசியுள்ளார். இது விஜய்க்கு சாதகமானப் பேச்சு என்பது போல் தெரிந்தாலும், விஜய் யை சிக்கலில் மாட்டிவிடும் பேச்சாகத் தான் இருக்கிறது.
விஜய் யின் அடுத்தக் கட்ட நகர்வு தமிழ்நாடு அரசியலில் முக்கிய மாற்றத்தை தருவதாகவே இருக்கும் என்று தெரிகிறது.
- ஸ்கார்ப்பியன்
