பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை! முதலமைச்சரின் சட்டத்திருத்தம்!

 
CM Stalin CM Stalin

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனைகள் கடுமையாக ஆக்கப்பட்டுள்ளது. இது குறித்தான சட்டத்திருத்த மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்,

“பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தண்டனைகளை மேலும் கடுமையாக்கிட ஏதுவாகக் குற்றவியல் சட்டங்களைத் திருத்தும் முன்வடிவைச் சட்டப்பேரவையில் அறிமுகம் செய்திருக்கிறேன்! பெண்களின் சமூக - பொருளாதார முன்னேற்றத்தை மனதில் வைத்தே ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்தி வரும் எனது #DravidianModel ஆட்சியில், பெண்களின் மீதான வன்முறைக்கு எதிராக தயவு தாட்சண்யமற்ற #ZeroTolerancePolicy கடைப்பிடிக்கப்படும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருத்தபப்ட்ட சட்டத்தின் படி தண்டனை விவரம் வருமாறு,

பாலியல் வன்புணர்ச்சி செய்தால் 10 ஆண்டுகள் கடுங்காவல் என்று இருந்த தண்டனை 14 ஆண்டுகள் கடுங்காவல் என அதிகரிக்கப்பட்டுள்ளது. நெருங்கிய உறவினர் அல்லது காவல்துறையினர் வன்புணர்ச்சியில் ஈடுபட்டால் 10 ஆண்டு தண்டனை 20 ஆண்டுகள் தண்டனையாக உயர்த்தப்பட்டுள்ளது.

12 வயதுக்குட்பட்ட சிறுமி மீது பாலியல் வன்புணர்ச்சி செய்தால் குறைந்தபட்சம் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது. பாலியல் வன்புணர்ச்சி மற்றும் மரணத்தை விளைவிக்கும் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை, கூட்டுப்பாலியல் வன்புணர்ச்சிக்கு மரண தண்டனை, மீண்டும் மீண்டும் குற்றம் இழைப்பவர்களுக்கு மரண தண்டனை என அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெண்ணை பின் தொடர்தல் குற்றத்திற்கு, முதல் முறை என்றால் 5 ஆண்டுகள் சிறை, இரண்டாவது முறை என்றால் 7 ஆண்டுகள் சிறை, பாலியல் தொல்லை கொடுத்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை என்பது 5 ஆண்டுகள் சிறை தண்டனையாக மாற்றி சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.


 

From around the web