நெசவாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்... இனி 1,000 யூனிட் மின்சாரம் இலவசம்.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

 
Electricity

கைத்தறி மற்றும் விசைத்தறி உற்பத்தியாளர்களுக்கு இலவச மின்சாரத்தை 1,000 யூனிட்டாக உயர்த்தி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் விசைத்தறி நெசவாளர்களுக்கான 700 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கைத்தறி மற்றும் விசைத்தறி உற்பத்தியாளர்களுக்கு 1,000 யூனிட்டாக உயர்த்தி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

MKS

கைத்தறி, விசைத்தறி உற்பத்தியாளர்களுக்கு மின் கட்டண சலுகை மார்ச் 1 முதல் அமலாகி உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாநிலத்தில், விசைத்தறிக்கு 3 நிலையிலான மின்கட்டணம் ஒரே நிலையாக மாற்றம் செய்து, ஒரு யூனிட்டுக்கு 70 பைசா மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. 

மேலும், விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 700 யூனிட்டாக இருந்த நிலையில், 1,000 யூனிட்டாக உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதுபோன்று கைத்தறி நெசவுக்கு 200 யூனிட் இலவசம் என்பது 300 யூனிட்டாக உயர்த்தியும் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

Handloom

ஈரோடு இடைத்தேர்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 1-ம் தேதி முன் தேதியிட்டு அமல்படுத்தப்படுகிறது.

From around the web