6 முதல் 12-ம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு.. புதிய அட்டவணை வெளியீடு!

 
exam

தமிழ்நாடு முழுவதும் நாளை அரையாண்டுத் தேர்வுகளு தொடங்க இருந்த நிலையில் வரும் 13-ம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. 36 மணி நேரம் இடைவிடாது கொட்டிய கனமழையால் 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மழை நின்று சுமார் ஐந்து நாள்களாகியும் பல இடங்களில் இன்னும் வெள்ளநீர் வடியவில்லை.

exam

இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு கடந்த 4-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், தமிழ்நாடு முழுவதும் நாளை அரையாண்டுத் தேர்வுகள் தொடகும் என ஏற்கனேவ அறிவிக்கப்பட்ட நிலையில், கனமழை காரணமாக புத்தகங்கள் இழந்த மாணவர்கள் தேர்வுக்கு படித்து தயாராக முடியாத நிலை ஏற்பட்டது.

exam

இதனைக் கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் நாளை திங்கள்கிழமை (11.12 2023) தொடங்கவிருக்கும் நேர்வுகளை புதன்கிழமை (13.12.2023) அன்று தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இதனடிப்படையில் அரையாண்டுத் தேர்வுகளுக்கான புதிய கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

exam

இதற்கிடையே, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் தங்களது பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப்புத்தகம் உள்ளிட்ட உடைமைகளை இழந்த மாணவர்களுக்கு, பள்ளிகள் திறந்தவுடன் பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடை மற்றும் புத்தகப்பை போன்ற பொருட்களை வழங்க நாளை (11.12.2023) மாணவர்களின் தேவைகளைக் கண்டறிந்து, (12.12.2023) அன்று பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப் புத்தகம் உள்ளிட்டவை வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

From around the web