6 முதல் 12-ம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு!

 
Exam

6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.

தமிழ்நாட்டில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. நேற்றைய தினம் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தேர்வு அட்டவணை வெளியானது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோருக்கு சமக்ர ஷிக்‌ஷா (Samagra Shiksha) மாநில திட்ட இயக்குநர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

அதன்படி 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 7 முதல் 22-ம் தேதி வரையும், 6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 11 முதல் 21-ம் தேதி வரையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டு முதல் தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு மாநில அளவில் ஒரே வினாத்தாள் அடிப்படையில் நடத்தப்படுகிறது.

Exam

6 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை

டிசம்பர் 11 - மொழிப்பாடம் (தமிழ்)

டிசம்பர் 12 - விருப்ப மொழி

டிசம்பர் 13 - ஆங்கிலம்

டிசம்பர் 15 – அறிவியல்

டிசம்பர் 18 – கணிதம்

டிசம்பர் 20 - சமூக அறிவியல்

டிசம்பர் 21 - உடற்கல்வி தேர்வுகள்

11, 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை

டிசம்பர் 7 – மொழிப்பாடம் (தமிழ்)

டிசம்பர் 08 – ஆங்கிலம்

டிசம்பர் 11 - கணிதம், விலங்கியல், வணிகம், மைக்ரோ பயாலஜி, ஊட்டச்சத்து, டெக்ஸ்டைல் ​​& டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை, விவசாய அறிவியல், நர்சிங் (பொது)

டிசம்பர் 13 - தகவல் தொடர்பு ஆங்கிலம், அறவியல் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், உயிர் வேதியியல், ஹோம் சயின்ஸ், அரசியல் அறிவியல், புள்ளியியல்

டிசம்பர் 16 - இயற்பியல், பொருளியல்

டிசம்பர் 19 - வேதியியல், அக்கவுண்டன்சி, புவியியல்

டிசம்பர் 22 - உயிரியல், தாவரவியல், வரலாறு, பிஸினஸ் கணிதம் மற்றும் புள்ளியியல்

DPI

தேர்வுக்கு முந்தைய நாளில் அதற்கான வினாத்தாள்களை தலைமை ஆசிரியர்கள் எமிஸ்தளம் வழியாக பதிவிறக்கம் செய்து அச்சிட்டு கொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்வதில் பிரச்சினை இருந்தால், 14417 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அதைப் பதிவு செய்ய வேண்டும். இதனிடையே 11, 12-ம் வகுப்புகளுக்கான பாடங்கள் முழுவதையும் டிசம்பர் முதல் வாரத்திற்குள் நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ​​அரையாண்டு தேர்வுகள் முடிந்த பிறகு, டிசம்பர் 23 முதல் ஜனவரி 1-ம் தேதி வரை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பத்து நாட்களும், 6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 11 நாட்களும் அரையாண்டு விடுமுறை என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

From around the web