மக்கள் தொகை அடிப்படையில் ஜி.எஸ்.டி ? ஒன்றிய அரசுக்கு சபாநாயகர் அப்பாவு கேள்வி!!

 
Appavu

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்கு ஒன்றிய அரசு தரப்பில் நேரடியாக விளக்கம் ஏதும் தராத நிலையில், தென்னிந்திய மாநிலங்களில் இது பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு மக்கள் தொகை அடிப்படையில் ஜி.எஸ்.டி வசூலிப்பார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

திருச்செந்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அப்பாவு, ”மும்மொழிக் கல்வி மூலம் குலக்கல்வியை கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்கிறது. தமிழ்நாட்டின் கல்விக்கொள்கையை இந்திய அரசு ஏற்றால் முன்மாதிரியாக திகழும். மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதி வரையறை செய்யும் பட்சத்தில், GST வரியையும் மக்கள் தொகை அடிப்படையில் மத்திய அரசு வசூலிக்குமா?”என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவு, “தனியார் பள்ளிகளில் இந்தி கற்றுகொடுக்கிறது திமுக, காங்கிரஸ், பாஜக என்பதல்ல பேச்சு. சிபிஎஸ்சி பள்ளிகளில் தமிழ் கட்டாயம் என்ற சட்டத்தை கொண்டுவர தமிழ்நாடு அரசுக்கு எவ்வளவு நேரம் ஆகும்?. இஸ்ரோ விஞ்ஞானி ஆராய்ச்சி தலைவர் நாராயணன், சிவன், மயில்சாயி அண்ணாதுரை உள்ளிட்டோர் தமிழில் அரசு பள்ளியில் பயின்றவர்கள்தான்” என்று தெரிவித்தார்

From around the web