ரூ.55,000 மாத ஊதியத்தில் காத்திருக்கும் அரசு வேலை.. டிகிரி தேர்ச்சி போதும்!

 
TN Jobs TN Jobs

திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படையில் ஆஸ்பிரேஷனல் பிளாக் ஃபெலோ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணியின் பெயர்: ஆஸ்பிரேஷனல் பிளாக் ஃபெலோ

காலி பணியிடங்கள்: 1

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

jobs

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கில மொழி தெரிந்திருக்க வேண்டியது அவசியம். தரவு பகுப்பாய்வு பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். திட்ட மேலாண்மை திறன் பெற்றிருக்க வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு, யுபிஎஸ்சி நடத்திய முதல்நிலைத் தேர்வில் அல்லது குரூப் 1 தேர்வுக்கு டிஎன்பிஎஸ்சி நடத்திய முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.55,000 ஊதியம் வழங்கப்பட உள்ளது.

Application

தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதியான நபர்கள் Shortlist, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணபிக்கும் முறை:

உரிய இணைப்புகள்/ஆவணங்களுடன் முறையாகச் சான்றொப்பமிடப்பட்ட விண்ணப்பங்கள், கலெக்டர் அலுவலகம், மேம்பாட்டுப் பிரிவு, விருதுநகர் (கீழே உள்ள முகவரி) என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ நவம்பர் 15ம் தேதி மாலை 5.00 மணிக்குள் வந்தடைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web