அரசு பேருந்து ஆட்டோ நேருக்கு நேர் மோதி கோர விபத்து... 2 குழந்தைகள் உள்பட 6 பேர் பலியான சோகம்!! முதல்வர் நிதியுதவி அறிவிப்பு

 
Mamallapuram

மாமல்லபுரம் அருகே அரசு பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி அரசு பேருந்து ஒன்று 30 பேருடன் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை கடும்பாடி - மணமை இடைப்பட்ட பகுதியில், ஆட்டோவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மகாபலிபுரம் நோக்கி சென்றுள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக மாமல்லபுரம்மனமை என்ற பகுதியில் பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியதில், ஆட்டோவில் பயணித்த 2 குழந்தைகள், 3 பெண்கள் ஆட்டோ ஓட்டுநர் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Accident

சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்ற விபரம் இன்னும் தெரியவில்லை. இந்த விபத்து குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாமல்லபுரம் போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆட்டோ நிலை தடுமாறி வலது பக்கவாட்டில் திடீரென திரும்பியதால் இந்த கோர விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்துத் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டோவில் பயணித்த 6 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Mamallapuram

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்திரவிடப்பட்டுள்ளது.

From around the web