தலையில் ஈட்டி பாய்ந்து உயிரிழந்த சிறுவன்.. ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

 
Cuddalore

உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் நிதிஉதவியினை அறிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் வடலூர் பார்வதிபுரம் தருமச்சாலை பகுதியை சேர்ந்தவர் திருமுருகன் என்பவரின் மகன் கிஷோர். இவர் கடந்த 24-ம் தேதி பள்ளியில் நடைபெற்ற பயிற்சியின் போது தலையில் ஈட்டி பாயந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

Vadalur

இந்த நிலையில், உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் நிதிஉதவியினை அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், பார்வதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வன். கிஷோர் (வயது 15) த/பெ. முருகன், என்பவர் வடலூரிலுள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த நிலையில் 24.07.2024 அன்று பள்ளி மைதானத்தில் நடைபெற்ற ஈட்டியெறிதல் பயிற்சியின்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் கிஷோரின் தலையில் ஈட்டி பாய்ந்ததால் பலத்த காயமடைந்த நிலையில் புதுச்சேரி மற்றும் சென்னையிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டு, பின்னர் 30.07.2024 அன்று முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.


மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு மூன்று லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web