மீண்டும் எக்ஸ் தளத்தில் ட்ரெண்ட் ஆகும் ஆளுநர் ஆர்.என்.ரவி!!

உச்சநீதிமன்றம் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க காலநிர்ணயம் செய்துள்ளது. மேலும் ஆளுநர் நிறுத்தி வைத்திருந்த 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். இந்த ஒப்புதலைத் தொடர்ந்து சட்டவடிவம் பெற்றுள்ள மசோதாக்கள் தமிழ்நாடு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு பல்கலைக்கழகங்களுக்கு வேந்தர் ஆகிவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை அடுத்து தானாகவே பதவியை ராஜினாமா செய்துவிடுவார் ஆளுநர் ஆர்.என்.ரவி என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் #GetoutRavi ஹேஷ்டேக் மீண்டும் சமூகத்தளங்களில் ட்ரெண்ட் ஆகத் தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள திமுகவினர் தங்கள் பகுதிகளில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான உச்சநீதிமன்றத் தீர்ப்பை கொண்டாடி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.