இன்று அரசு பள்ளிகளுக்கு விடுமுறை.. வௌியான முக்கிய அறிவிப்பு!

 
Leave

சென்னையில் இன்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாகவும் வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ‘மிக்ஜாம்’ என்று பெயரிடப்படும் புயல், வரும் செவ்வாய்க்கிழமை காலை சென்னைக்கும், ஆந்திராவின் மசூலிப்பட்டினத்துக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Rain

நாளை மறுதினம் புயல் கரையைக் கடக்கும் என முன்னரே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு நாள் தாமதமாக கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் நாளை (டிசம்பர் 2) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மழை அச்சம் ஒருபுறம் இருந்தாலும் இந்த விடுமுறைக்கான காரணம், ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற இருக்கிறது.

Leave

அரசு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் பயிற்சி இருப்பதன் காரணமாக, சென்னை மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web