அரசு வேலை.. தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. இன்றே கடைசி நாள்!

 
Perambalur

சமீபத்தில் இரவு நேர காவலர் பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டது. தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 34 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பதவி பெயர்: இரவு நேர காவலர் (Night Watchman)

காலியிடங்கள்: 1

கல்வி தகுதி:

தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

jobs

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 34 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Application

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 05.09.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

From around the web