அரசு பேருந்து ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு.. அலறி அடித்து ஓடிய பயணிகள்.. பகீர் வீடியோ!

 
Papanasam

அம்பாசமுத்திரம் அருகே வீரவநல்லூரில் அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் ம்ரம நபர்கள் தகராறு செய்து அரிவாளால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த முத்துசாமி. இவரது மகன் ரெஜி (45). இவர் அரசு பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். தென்காசி மாவட்டம், முக்கூடல் அருகேயுள்ள இடைகால் கிராமத்தைச் சேர்ந்த ராமானுஜம் மகன் கண்ணன் (35) அரசு பேருந்து நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இருவரும் நேற்று (நவ. 15) மாலை 6.30 மணியளவில் பாபநாசம் பணிமனையில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் பேருந்தை இயக்கினர்.

கல்லிடைக்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் மோட்டார் பைக்கில் வந்த மூவர் பேருந்தை வழி மறித்து நிறுத்தி, இருவர் பேருந்தில் ஏறியுள்ளனர். இதற்கு பேருந்து ஓட்டுநர் ரெஜி கண்டித்துள்ளார். இதுகுறித்து பேருந்தில் பயணித்த இருவரும் மோட்டார் சைக்கிளில் விட்டுச் சென்றவரிடம் தகவல் தெரிவித்தனர்.

Protest

இதையடுத்து ஆத்திரமடைந்த மோட்டார் பைக்கில் வந்தவர் மற்றும் பேருந்தில் பயணித்த மூவரும் சேர்ந்து வீரவநல்லூரில் நிறுத்தத்தில் பேருந்து நின்றபோது ஓட்டுநர் ரெஜியை அரிவாளால் வெட்டினர். இதனை தடுக்க வந்த நடத்துனர் கண்ணனையும் அவர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்று விட்டனர்.

இதனை தொடர்ந்து, ஓட்டுநர், நடத்துநர் இருவரும் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வீரவநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்தும், மர்ம நபர்களை கைதுசெய்யும் வரை பேருந்துகளை இயக்கமாட்டோம் என்றும் கூறி பாபநாசம் பணிமனையை சேர்ந்த பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. போக்குவரத்து கழக ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

From around the web