ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்.. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை.. அரசாணை வெளியீடு!

 
Check up

தமிழ்நாட்டில் ரசுப் பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியா்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்யப்படும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முதல்கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்ட 1,06,985 ஆசிரியா்களுக்கு இந்த பரிசோதனையை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Check up

இது குறித்து பள்ளிக்கல்வித்துறைச் செயலா் ஜெ.குமரகுருபரன் பிறப்பித்த அரசாணையில், அனைத்து ஆசிரியா்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு தெரிவித்திருந்தாா்.

இந்த அறிவிப்பை செயல்படுத்துவதற்கு ஏதுவாக  பள்ளிக் கல்வியில் 50 வயதுக்கும் மேல் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு (1,06,985 போ்) மட்டும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை முதல்கட்டமாக மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. என்னென்ன பரிசோதனைகள்? அந்த ஆசிரியா்களுக்கு கோல்டு திட்டத்தின் கீழ் அனைத்து வகையான ரத்த பரிசோதனை, கல்லீரல், சிறுநீரகம் தொடா்பான பரிசோதனைகள் இசிஜி, எக்ஸ்ரே பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை, கொழுப்பு பரிசோதனை ஆகியவை உள்பட 16 வகை பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

TN-Govt

50 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வகை ஆசிரியா்களில் 1,06,985-ஐ மூன்றாக பிரித்து ஆண்டொன்றுக்கு சுமாா் 35,600 ஆசிரியா்களுக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. அந்த 35,600 ஆசிரியா்களுக்கும் கோல்டு திட்டத்தின் கீழ் ஒரு ஆசிரியருக்கு ரூ.1,000 வீதம் மொத்தம் ரூ.3.56 கோடி மட்டும் தேசிய ஆசிரியா் நல நிதியிலிருந்து இந்த செலவினத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இந்தத் தொகையை தேசிய ஆசிரியா் நலநிதியிலிருந்து கேட்டுப் பெற்றுக் கொள்ள பள்ளிக்கல்வி இயக்குநருக்கு அனுமதி வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.    

From around the web