மாணவர்களுக்கு வெளியான குட்நியூஸ்.. அனைத்து பள்ளிகளிலும் அதிவேக பிராட்பேண்ட் வசதி!

 
School

தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் ஒருங்கிணைந்த புதிதாக அதிவேக பிராட்பேண்ட் இணைப்பை  ஏற்படுத்திக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அதிவேக பிராட்பேண்ட் இணைப்பை நிறுவுவது குறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

school

இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்ககம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயா் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வகங்களில் சராசரியாக பத்து முதல் இருபது கணினிகள், புரொஜக்டா்களும் நிறுவப்பட்டுள்ளன. அவற்றுக்கு ஒருங்கிணைந்த பிராட்பேண்ட் சேவை அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இணையத்தின் வேகம் மிகவும் குறைவாக இருந்ததால் பள்ளிகளில் உள்ள ஆய்வகங்களின் பயன்பாடும் குறைந்தது. எனவே, ஒவ்வொரு பள்ளிகளும் தங்களுக்கு தனித்தனியாக 100 ம்க்ஷல்ள் வேகம் கொண்ட பிராட்பேண்ட் இணைப்பை அதிகபட்சம் ரூ.1,500 (ஜிஎஸ்டி உள்பட) கட்டணத்துக்குள் நிறுவிக் கொள்ளலாம்.

school

அதற்கான தொகை பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். பிராண்ட் பேண்ட் இணைப்புக்கான நிறுவுதல் கட்டணத்தை பள்ளிக்கு வழங்கப்படும் மானியத் தொகையிலிருந்து செலுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web