பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. கோடை விடுமுறை தேதி அறிவிப்பு

 
Leave

தமிழ்நாட்டில் ஏப்ரல் 13-ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் தேதியை, இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 17-ம் தேதி அறிவித்தது. இதன்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக, 40 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. இந்த ஓட்டுப்பதிவு பணிக்கு, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஓட்டுச்சாவடிகளாக செயல்பட உள்ளன. அதற்காக, ஓட்டுச்சாவடியாக செயல்படும் அனைத்து பள்ளிகளையும், வரும் 15-ம் தேதி முதல் தேர்தல் ஆணையம் தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க உள்ளது.

இந்நிலையில், 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு முன்கூட்டியே ஏப்ரல் 2 முதல் 12-ம் தேதி வரை ஆண்டுத் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Exam

இதன்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 2 முதல் 12-ம் தேதி வரை ஆண்டுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. குறிப்பாக ஏப்ரல் 2-ம் தேதி மொழித் தேர்வு நடைபெற உள்ளது. ஏப்ரல் 3-ம் தேதி ஆங்கிலப் பாடத்துக்கான ஆண்டுத் தேர்வு நடைபெற உள்ளது. அதேபோல ஏப்ரல் 5-ம் தேதி கணிதப் பாடத்துக்கான தேர்வு நடைபெற உள்ளது. 

தொடர்ந்து 4 மற்றும் 5-ம் வகுப்பு  மாணவர்களுக்கு ஏப்ரல் 10-ம் தேதி அறிவியல் பாடத்துக்கான தேர்வு நடைபெற உள்ளது. ஏப்ரல் 12-ம் தேதி சமூக அறிவியல் பாடத்துக்கான தேர்வு நடைபெற உள்ளது. இதில், ஏப்ரல் 8-ம் தேதி சிறுபான்மையின மாணவர்களுக்கான மொழிப்பாடத் தேர்வு நடைபெறுகிறது.

Exam

அதேபோல 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 2 முதல் 12-ம் தேதி வரை ஆண்டுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. குறிப்பாக ஏப்ரல் 2-ம் தேதி மொழித் தேர்வு நடைபெற உள்ளது. ஏப்ரல் 3-ம் தேதி ஆங்கிலப் பாடத்துக்கான ஆண்டுத் தேர்வு நடைபெற உள்ளது. அதேபோல ஏப்ரல் 4-ம் தேதி உடற்கல்வி பாடத்துக்கான தேர்வு நடைபெற உள்ளது. 

தொடர்ந்து  மாணவர்களுக்கு ஏப்ரல் 5-ம் தேதி கணிதத்துக்கும், ஏப்ரல் 8-ம் தேதி விருப்பப் பாடத்துக்கும் தேர்வு நடைபெறுகிறது. ஏப்ரல் 10-ம் தேதி அறிவியல் பாடத்துக்கான தேர்வு நடைபெற உள்ளது. ஏப்ரல் 12-ம் தேதி சமூக அறிவியல் பாடத்துக்கான தேர்வு நடைபெற உள்ளது. தொடர்ந்து ஏப்ரல் 13-ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

From around the web