மாதம் முதல்நாளே உயர்ந்த தங்கம் விலை.. இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

 
Gold

அரசன் ஆனாலும், ஆண்டி ஆனாலும் நம்மளிடம் கடுகளவாவது நிச்சயம் தங்கம் இருக்கும். ஏனென்றால் தங்கமானது அந்த அளவிற்கு நம்மளுடைய வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. உலகில் என்னதான் புதிய புதிய ஆபரங்கள் இருந்தாலும் தங்கத்தின் மீதான மதிப்பு மற்றும் மோகமும் மட்டும் என்றும் நம்மளிடம் இருந்து குறையப்போவதும் இல்லை.

நாட்டின் பொருளாதாரத்திற்கும் பெரும்பங்கு வகுக்கிறது இந்த தங்கம். தங்கத்தை விருப்பதவர்கள் எவரும் இல்லை. நாட்டின் பணவீக்கம் உயர்விற்கு மிக முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிகளவு முதலீடு செய்து, பயன்படுத்துகின்றன. நேற்று உயர்ந்து விற்பனையான தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்து விற்பனையாகிறது.

Gold-Price

அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 10 ரூபாய் உயர்ந்து, ரூ.6,430-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து, ரூ.51,440-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.5,259-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 8 ரூபாய் உயர்ந்து, ரூ.5,267-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 91,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 700 ரூபாய் உயர்ந்து, ரூ.91,700-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.91.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

From around the web