தங்கம் விலை சற்று குறைந்தது.. இன்றைய நிலவரம் என்ன?
பெண்களுக்கு தங்கம் என்பது மிகப்பெரிய முதலீடு. சிறுக சிறுக சேர்த்து கிராம் கிராமாக வாங்குவார்கள். ஒரு சவரன் எடுக்கவே ஓராண்டு சேமிப்பார்கள் நடுத்தர குடும்பத்து பெண்கள். இப்போது தங்கம் விலை தாறு மாறாக உயர்ந்து வருவதால் அது ஏழைகளுக்கு எட்டாக்கனியாகுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
தங்க நகைகளில் முதலீடு செய்வது பிற்கால வாழ்க்கைக்கு பெரிய அளவில் உதவும், பெண் பிள்ளைகளுக்கு பிற்காலத்தில் பலனாக இருக்கும் என்பதால் மக்கள் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். தங்கம் குறைந்தால் மகிழ்வதும், அதிகரித்தால் கவலைப்படுவதும் நம்மவர்களின் இயல்பு. இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 10 ரூபாய் குறைந்து, ரூ.5,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, ரூ.46,400-க்கு விற்பனையாகிறது.
அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,759-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 8 ரூபாய் குறைந்து, ரூ.4,751-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 77,200 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 700 ரூபாய் குறைந்து, ரூ.76,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.76.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.