அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. சவரனுக்கு 360 ரூபாய் குறைந்தது.. இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!
இந்தியாவில் தேவைக்கேற்ப தங்கத்தை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம். இருந்தாலும், நீங்கள் ஒரு முதலீட்டாளராக இருந்தால் சில எச்சரிக்கைகளைப் பின்பற்றுவது சிறந்தது. கடந்த சில வருடங்களாகத் தங்கம் எந்தத் தனித்துவமான வருமானத்தையும் கொடுக்கவில்லை. எனவே பன்மயமாக்கலின் ஒரு அளவீடாக மட்டுமே தங்கத்தை வாங்குவது சிறந்தது. பங்குச் சந்தை அல்லது ரியல் எஸ்டேட் போன்ற இதர சொத்துப் பிரிவுகள் வீழ்ச்சியடையும் போது தங்கம் முன்னனியில் இருக்கும்.
இது ஏனென்றால், அது சொத்துக்களின் பாதுகாப்பான புகலிடமாகக் கருதப்படுகிறது. இருந்தாலும், உங்கள் அனைத்து முட்டைகளும் ஒரே கூடைக்குள் வைக்கக் கூடாது. எனவே முதலீட்டு அபாயத்தை மாறுபட்ட சொத்து வகுப்புகளில் பரவலாக முதலீடு செய்ய வேண்டும். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும், இந்தியாவில் மிகவும் முறைப்படுத்தப்பட்ட மற்றும் திட்டமிடப்பட்ட வழியில் தங்கம் வாங்கலாம். கடந்த சில நாட்களாக உயர்ந்து விற்பனையான தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 45 ரூபாய் குறைந்து, ரூ.6,730-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து, ரூ.54,840-க்கு விற்பனையாகிறது.
அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.5,550-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 37 ரூபாய் குறைந்து, ரூ.5,513-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 1,02,200 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,200 ரூபாய் குறைந்து, ரூ.1,01,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.101.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.