மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. தங்க பிரியர்கள் மகிழ்ச்சி!

 
Gold-Price

தங்கத்தை தங்கமாகவே வாங்கும் போக்கு இந்தியாவில் வேகமாக மாறி வருகிறது. தங்கம் வாங்குவதில் இந்தியர்களுக்கு இருந்த பழைய ஆர்வம் மீண்டும் துளிர்விடுவது கடினம் என்கிறது உலக தங்க கவுன்சிலின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது. தங்கத்திற்கு பல முனைகளில் இருந்து அடிமேல் அடி விழுந்து கொண்டிருக்கிறது.

தங்கத்தின் நுகர்வை குறைக்க திட்டமிட்டுள்ள ஒன்றிய அரசு, வயிறு எரியும் அளவுக்கு தங்கத்தின் மீது வரி மேல் வரி விதித்து வருகிறது. இப்படி செய்வதால் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைத்துக் கொள்ள முடியும் என்று அரசு கருதுகிறது. பணமதிப்பிழப்பு போன்ற அரசின் நடவடிக்கையால் தங்கத்திற்கான தேவை அதிகரித்தது வருவதாக கூறப்படுகிறது.

Gold-Price

அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 70 ரூபாய் குறைந்து, ரூ.6,330-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து, ரூ.50,640-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.5,243-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 58 ரூபாய் குறைந்து, ரூ.5,185-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold-Price

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 87,500 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து, ரூ.87,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.87.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.