தொடர் சரிவில் தங்கம் விலை.. சவரனுக்கு 80 ரூபாய் குறைந்தது.. நகை பிரியர்கள் மகிழ்ச்சி!
தங்கம் இந்திய பெண்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகவே உள்ளது. திருமணத்தின் போது பெண்களுக்கு சீர் கொடுப்பது தொடங்கி பெண் குழந்தை பிறந்து விட்டால் தங்கம் அவர்களின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக அமைந்து விடுகிறது.
நாம் வாங்கும் தங்கம் பல்கி பெருக வேண்டும். நம் வீட்டிலேயே தங்க வேண்டும் என்றுதான் பலரும் விரும்புவார்கள். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 10 ரூபாய் குறைந்து, ரூ.5,660-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, ரூ.45,280-க்கு விற்பனையாகிறது.
அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,645-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 9 ரூபாய் குறைந்து, ரூ.4,636-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 77,500 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,000 ரூபாய் குறைந்து, ரூ.76,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.76.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.