தொடர் சரிவில் தங்கம் விலை.. நகை பிரியர்கள் மகிழ்ச்சி!

 
gold

இந்தியாவில் தங்கத்தின் விலையை நிர்ணப்பதில் ஏராளமான காரணங்கள் உள்ளன. முதல் காரணம், சர்வதேச காரணங்களாகும். இதற்கு ஏராளமான பல காரணங்கள் உள்ளன. இதில் முக்கியமானது, தங்கத்திற்கான தேவை மற்றும் வரத்து ஆகும். கோல்ட் எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட்ஸ் தவிர, நாட்டில் உள்ள மத்திய வங்கிகளில் இருந்தும் தங்கத்திற்கான தேவை உருவாகும். தங்கம் படிந்திருக்கும் இடங்கள் அதிகம் கண்டுபிடிக்கப்பட்டால், சுரங்கங்களில் அதிக தங்கம் வெட்டி எடுக்கப்பட்டால் சந்தையில் தங்கத்தின் வரத்து அதிகமாகும். அது தங்கத்தின் விற்பனை மீதான அழுத்தத்தை அதிகரிக்கும்.

அரசின் கொள்கை மாற்றங்களும் விலை ஏற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மத்திய பட்ஜெட்டுக்கு பிறகு கலால் வரி உள்ளிட்ட வரிவிதிப்பில் சில மாற்றங்கள் இருந்தன. இது அரசின் கொள்கை மாற்றத்திற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்வதற்கு இவைகள் முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. இது, ஆபரண தங்க விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் இறுக்கமடைந்து வருவதாக நாம் எழுதினால், இந்தியாவில் தங்கத்தின் விலையில் அது தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, தங்க விலை உயர்வில் நீங்கள் கொஞ்சம் முன்னெச்சரிக்கை வகிப்பது நல்லது.

Gold-Price

அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 10 ரூபாய் குறைந்து, ரூ.6,650-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, ரூ.53,200-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.5,456-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 9 ரூபாய் குறைந்து, ரூ.5,447-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

gold

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 95,200 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 200 ரூபாய் குறைந்து, ரூ.95,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.95.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

From around the web