தொடர் சரிவில் தங்கம் விலை.. நகை பிரியர்கள் மகிழ்ச்சி!

 
gold

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம், இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம்.

கடந்த 2 நாட்களாக குறைந்து விற்பனையான தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. இன்றைய தங்கம் விலையை சென்னை மற்றும் பிற நகரங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவான வித்தியாசம் மட்டுமே உள்ளது.

Gold & Silver

அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 10 ரூபாய் குறைந்து, ரூ.5,740-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, ரூ.45,920-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,710-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 8 ரூபாய் குறைந்து, ரூ.4,702-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 75,500 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 500 ரூபாய் உயர்ந்து, ரூ.76,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.76.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

From around the web