2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 1,160 ரூபாய் அதிகரிப்பு 

 
Gold
தங்கம் விலை கடந்த 2 நாட்களில் சவரனுக்கு 1,160 ரூபாய் அதிகரித்துள்ளது.

 

சர்வதேச தங்கத்தின் விலைகள், செலாவணி மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள், உள்ளூர் வரிவிதிப்புகள் போன்றவற்றின் அடிப்படையிலேயே இந்தியாவில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், தங்கம் விலை உயர சர்வதேச விலைகள் தான் முக்கியக் காரணம். சர்வதேச அளவில் தங்கத்தின் விலை உயரும் போது, இந்தியாவில் தங்கத்தின் விலையில் மாற்றம் காணப்படும்.

Gold

இன்றைய தங்கத்தின் விலை, நேற்றைய தங்கத்தின் விலையை விட மாறுபட்டதாக இருக்கும். இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமைகளில் வர்த்தகம் எதுவும் நடப்பதில்லை என்பதால், அன்றைக்கு மட்டும் தங்கத்தின் விலை மாறாது. பணவீக்கம் அதிகமாகும் போது தங்கத்தின் விலை குறையும். பணவீக்கம் அதிகரிக்கும் போது வட்டி விகிதங்கள் உயரும் என்பது பொதுவாக பொருளாதார நடைமுறையாகும்.

 

கடந்த ஜூன் மாதம் 4-ம் தேதி ஆபரணத்தங்கம் ஒரு பவுன் ரூ.46 ஆயிரம் என்ற புதிய உச்சத்தை அடைந்தது. அதன் பிறகு விலை சிறிது சிறிதாக குறைந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் தங்கம் விலை திடீரென அதிரடியாக உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.100 அதிகரித்துரூ.5,510-க்கும்,பவுனுக்கு ரூ.800 அதிகரித்து ரூ.44,080-க்கும் விற்பனையானது.

gold

இந்நிலையில், தங்கம் விலை நேற்றும் அதிகரித்தது. இதன்படி, தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.45 அதிகரித்து ரூ.5,555-க்கும், பவுனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.44,440-க்கும் விற்பனையானது. இதன்மூலம், கடந்த 2 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,160 அதிகரித்துள்ளது. இதேபோல, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை பவுன் ரூ.48,200-க்கு விற்பனையானது.

From around the web