தங்கம் விலை சவரனுக்கு 96 ரூபாய் குறைந்தது..! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

 
gold

இந்தியாவில் தங்கம் விலையானது சர்வதேச பொருளாதார நிலவரப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது. என்ன தான் விலை ஏற்றம் இருந்தாலும் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை குறையாமல் இருக்கிறது. காரணம் தங்கம் என்பது ஒரு முதலீடு பொருளாக பார்க்கப்படுவதால் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை எந்த சூழ்நிலையிலும் குறையாமல் இருக்கிறது.

மேலும் எத்தனை நகைகள் இருந்தாலும் தங்கம் நகைகள் மீது உள்ள ஆசை பெண்களுக்கு அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் இன்றைய தங்கத்தின் விலையை பொறுத்து தங்கம் வாங்க செல்வதே சிறந்தது என்பதால் தினசரி தங்கம் விலை நிலவரத்தை தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Gold & Silver

அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 12 ரூபாய் குறைந்து, ரூ.5,338-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 96 ரூபாய் குறைந்து, ரூ.42,704-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,382-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 9 ரூபாய் குறைந்து, ரூ.4,373-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 74,700 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 200 ரூபாய் குறைந்து, ரூ.74,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

From around the web