ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை.. கமல்ஹாசன் வரவேற்பு!!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு இன்று 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. வெகுவிரைவாக தமிழக போலீசாரால் இந்த வழக்கில் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளதை பல்வேறு தரப்பினர் வரவேற்றுள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ளார்.
”அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு, தண்டனைக் குறைப்பின்றி 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதித்திருக்கும் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை மனமுவந்து வரவேற்கிறேன். பெண்களுக்கு எதிரான எந்த ஒரு செயலையும் ஒருபோதும் சகித்துக்கொள்ளவோ சமரசம் செய்துகொள்ளவோ முடியாது. அத்தகைய குற்றங்களுக்கு அஞ்சும் வகையிலான தண்டனை தரப்படும் என்னும் நம்பிக்கையை இத்தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் கமல்ஹாசன்.