மாணவிகள் கட்டாயம் இதைச் செய்யுங்க! அமைச்சர் வேண்டுகோள்!!
Dec 29, 2024, 20:24 IST
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அனைத்துப் பெண்களும், மாணவிகளும் தமிழ்நாடு காவல்துறையின் “காவல் உதவி” செயலியை மொபைல் போனில் தரவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். ஆபத்துக் காலத்தில் குறிப்பிட்ட பொத்தானை அழுத்தினால் , இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை உடனடியாக காவல்நிலையத்திற்கு அனுப்பிவிடும். போலீசார் உடனடியாக உதவி தேவைப்படும் இடத்திற்கு விரைந்து வந்து விடுவார்கள் என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசு பெண்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.