ஒரு நிமிடத்தில் 146 முறை சிலம்பம் சுழற்றி சிறுமி உலக சாதனை..! சூப்பர் வீடியோ

 
Coimbatore Coimbatore

கோவையில் கண்களைக் கட்டியபடி ஒரு நிமிடத்தில் 146 முறை சிலம்பம் சுழற்றி சிறுமி உலக சாதனை படைத்துள்ளார். 

கோவையில் சிலம்ப கலையை மீட்டெடுக்கும் விதமாக கண்களை கட்டிக்கொண்டு 6 வயது சிறுமி ஒரு நிமிடத்தில் 146 முறை சிலம்பம் சுழற்றி சாதனையை நிகழ்த்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

Coimbatore

கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் ராஜ். இவரது மனைவி இசைவாணி. இந்த தம்பதிக்கு அகல்யா (6) என்ற மகள் உள்ளார். இவர் சிறு வயதிலிருந்து சிலம்பம் கலையில் ஆர்வம் கொண்டு பல்வேறு சாதனைகளை செய்து அசத்தி வருகிறார். 

இதன் தொடர்ச்சியாக அழிந்து வரும் பாரம்பரிய கலையான சிலம்ப கலையை மீட்டெடுத்து அனைவரிடமும் கொண்டு செல்லும் முயற்சியாக சிறுமி அகல்யா கண்களை கட்டிக்கொண்டு ஒரு நிமிடத்தில் 146 முறை சிலம்பத்தை சுழற்றி சாதனையை நிகழ்த்தியுள்ளார். கண்களை கட்டிக்கொண்டு சாதனை நிகழ்த்திய சிறுமியின் இந்த சாதனை துபாய் ஐன்ஸ்டின் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. 


இதற்கான சான்றிதழ்களை துபாய் ஐன்ஸ்டின் உலக சாதனை புத்தகத்தின் நிறுவனர் கார்த்திக், நிர்வாக இயக்குனர்மோனிகா ரோஷ்ணி வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர். ஏற்கனவே ஒரு நிமிடத்தில் 57 முறை சிலம்பம் சுழற்றியதை சிறுமி அகல்யா முறியடித்துள்ளதை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

From around the web