தவெக பொதுக்குழுக் கூட்டம்! விஜய் பங்கேற்பு!!

 
TVK

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழுக் கூட்டம் சென்னை திருவான்மியூரில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க நடிகர் விஜய் வருகை தந்துள்ளார்.

செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் 2500 பேர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தவெக கட்சியின் முக்கிய அரசியல் முடிவுகள் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

அதிமுகவுடன் சரிபாதி தொகுதிகள் மற்றும் இரண்டரை ஆண்டுகால ஆட்சி என்ற பார்முலாவை முன்வைத்தது தவெக. இதற்கு பாஜகவே பரவாயில்லையே என்று நினைத்து விட்டார் போல எடப்பாடி பழனிசாமி. பாஜக அதிமுக கூட்டணி உறுதி என்ற நிலையில் விஜய் தனித்து விடப்பட்டுள்ளார். ஒரு வேளை நாம் தமிழர் கட்சியும் விஜய் கட்சியும் கூட்டணி சேர்ந்தாலும் சேரலாம்.

அதிமுகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்ற நிலைப்பாட்டை தவெக எடுத்தால், இனி அதிமுக குறித்தும் விஜய் விமர்சனம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரைத்துறையில் நடிகர் விஜய் யின் ஆரம்பகாலப் படங்கள் மிகவும் அமெச்ச்சூர்த்தனமாகவே இருந்தது. தொடக்க கால விஜய் படங்களின் வெற்றிக்கு நடிகை சங்கவியின் கவர்ச்சியே காரணம் என்றும் கூறப்பட்டது உண்டு. விக்கிரமன் இயக்கத்தில் பூவே உனக்க்காக படம் வந்த பிறகு தான் விஜய் யை நடிகராக தமிழ்ச்சமூகம் ஏற்றுக் கொண்டது. அதே வேளையில் , நடிப்பு, நடனத்தில் தன்னைத் தானே மேம்படுத்திக் கொண்டது உள்ளிட்ட விஜய்யின் கடுமையான் உழைப்பும்m அவருக்கு கைகொடுத்தது.

அரசியலிலும் நடிகர் விஜய்யின் தொடக்க காலம் அவ்வளவு சிறப்பாக இல்லை. வொர்க் ஃப்ரம் ஹோம் அரசியல்வாதி என்ற ஏளனத்திற்குத் தான் ஆளாகியுள்ளார். பகவத் கீதையை வாங்கிக் கொண்டே பெரியார் அம்பேத்கர் எங்கள் கொள்கைத் தலைவர்கள் என்கிறார். பெரியாரை இழிவுபடுத்திய சீமானை குறைந்தபட்சமாகக் கூட கண்டிக்கவில்லை என ஏகப்பட்ட முரண்பாடுகளின் மொத்த உருவமாகவும் தான் அரசியலில் விஜய் காணப்படுகிறார்.

 திரைத்துறை போல அரசியலிலும் மெல்ல மெல்ல உயர்ந்து ஒரு நிலையான இடத்தைப் பிடிப்பாரா விஜய் என்ற கேள்வி எழுந்துள்ளது.