சென்னையில் தவெக பொதுக்குழு! ஏற்பாடுகள் மும்முரம்!!

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. தற்போதுமாவட்ட மற்றும் கிளைக்கழக நிர்வாகிகளை நியமினம் வேகமாக நடைபெற்று வருகிறது. கட்சி அமைப்பை வலுப்படுத்திவிட்டு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகிறது.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து ஆந்திராவின் பவன் கல்யாண் போல் கூட்டணி ஆட்சியில் பங்கு பெறலாமா? அல்லது தனித்துப் போட்டியிட்டு வலுவான கட்சியாக உருவெடுத்து அடுத்தடுத்த தேர்தல்களில் ஆட்சியைப் பிடிக்கலாமா என்பது தான் விஜய் முன் உள்ள பெரிய சவால்.
இந்நிலையில் தவெகவின் பொதுக்குழு கூட்டம் மார்ச் 28ம் தேதி சென்னை திருவான்மியூரில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு வரும் விஜய் யை வரவேற்கும் வகையில் 100 அடி உயரத்தில் மிகப்பெரிய பலூன் பறக்க விடப்பட்டுள்ளது. விஜய் படத்துடன் வெற்றி நிச்சயம் என்ற வாசகமும் அதில் இடம் பெற்றுள்ளது.
பொதுக்குழுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.