உயர்ந்தது கேஸ் சிலிண்டர் விலை... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

 
Commercial-Gas Commercial-Gas

தமிழ்நாட்டில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 7.50 உயர்ந்து ரூ. 1,817-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இதில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கும் நடைமுறையையும், எரிவாயு சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மாற்றியமைக்கும் நடைமுறையும் பின்பற்றப்படுகிறது.

Gas

அதன்படி கடந்த ஜூலை மாதம் 1-ம் தேதி 19 கிலோ எடைகொண்ட சிலிண்டருக்கு 31 ரூபாய் குறைக்கப்பட்டது. இதனால், சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 1,809.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதேவேளை, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்படவில்லை. இதனால், சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.818.50 விற்பனை செய்யப்பட்டு வந்தது.

Gas

இந்த நிலையில், 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.7.50 உயர்ந்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. வணிக சிலிண்டர் விலை ரூ.1,809.50-ல் இருந்து ரூ. 7.50 உயர்த்தப்பட்டு ரூ.1,817 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் வர்த்தகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனினும் வீட்டு உபயோக சிலிண்டர்  விலை மாற்றம் ஏதுமின்றி தொடர்ந்து ரூ.818.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

From around the web