வரலாறு காணாத வகையில் பூண்டின் விலை கடும் உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி!

 
Garlic Garlic

பூண்டின் வரத்து குறைந்துள்ளதால் சென்னையில் ஒரு கிலோ பூண்டின் விலை 700 முதல் 800 வரை விற்பனை செய்யபடுகிறது.

நமது அன்றாட சைவ, அசைவ சமையலில் பயன்படுத்தப்படும் விளைப்பொருள்களில் ஒன்று பூண்டு. இந்த பூண்டு மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் தேயிலை, இதற்கு அடுத்தபடியாக மலைத்தோட்ட காய்கறிகளான கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, பூண்டு, பீன்ஸ் உள்ளிட்ட மலைக் காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பிவைக்கப்படுகின்றன.

இதேபோல, கோத்தகிரி, மஞ்சூா், ஆடாசோலை, தேனோடு, கம்பை, அணிக்கொரை உள்பட பல்வேறு இடங்களில் மலைப் பூண்டு பயிரிடப்பட்டு உழவா் சந்தை உள்ளிட்ட பல்வேறு சந்தைகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. மாநிலத்தின் பெரும்பான்மையான தேவையை ஈடு செய்யும் வகையில் பிற மாநிலங்களில் இருந்தும் பூண்டு இறக்குமதி செய்யப்படுகிறது.

Garlic

இந்த நிலையில், கோயம்பேடு சந்தையில் இதுவரை இல்லாத வகையில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ பூண்டின் விலை 500 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விற்பனையில் ஒரு கிலோ 700 முதல் 800 ரூபாய் வரை விற்பனை செய்யபடுகிறது.

கடந்த 2 வாரங்களில் மட்டும் ஒரு கிலோ பூண்டின் விலை 250 ரூபாய்க்கு அதிகமாக அதிகரித்திருக்கிறது.  தக்காளி, வெங்காயம் ஆகிய அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்தபோது, அரசு தலையிட்டு விலைவாசியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தது. இதேபோல் பூண்டு விலை உயர்வை தடுக்கும் நோக்கிலும் பல்வேறு நடவடிக்கைகளை  அரசாங்கம் செய்ய வேண்டும் என்று வணிகர்களும் இல்லத் தரசிகளும் கவலை அடைந்திருக்கின்றனர்.

Garlic

துரித உணவகங்கள் ஏற்கனவே வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு, அரிசி விலை உயர்வு மற்றும் கோழி இறைச்சி விலை உயர்வு உள்ளிட்ட காரணிகளால் தொழிலை நடத்த முடியாமல் தவித்து வரும் நிலையில் தற்போது அசைவ உணவுகளில் பயன்படுத்தப்படும் பூண்டின் விலையும் உயர்ந்திருப்பது உணவக உரிமையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. துரித உணவுகளான ஃபிரைட் ரைஸில் இஞ்சி பூண்டு பயன்பாடு அதிகரித்துள்ளதால் துரித உணவுகளின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

From around the web