அரசு மருத்துவமனையில் வாக்குவாதம் செய்த கஞ்சா கருப்பு!!

சென்னையில் வசித்து வரும் காமெடி நடிகர் கஞ்சா கருப்பு கால் வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக போரூரில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு அவரை நீண்டநேரம் காக்க வைத்துள்ளனர். அந்த நேரத்தில் நாய்கடியால் பாதிக்கபப்ட்ட ஒருவர் வந்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மூதாட்டி ஒருவரும் வந்துள்ளார்.
இவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் யாரும் இல்லை என்று கூறப்பட்டதால் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் கஞ்சா கருப்பு. அவருடன் நோயாளிகளும் சேர்ந்து ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தனர். மருத்துவமனையில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
காலை 8 மணிக்கு வரவேண்டிய மருத்துவர்கள் மதியம் 3 மணிக்குத் தான் வருகிறார்கள். உயிருக்குப் போராடும் நிலையில் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க யாருமே இல்லை என்று கஞ்சா கருப்பு குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து மேயர் ப்ரியா மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.