5 காவலர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு

 
CM MKS

மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவலர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவலர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

police

இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “மதுவிலக்கு அமலாக்கப் பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியமைக்காக (i) பெ.சின்னகாமணன், காவல் ஆய்வாளர், மத்திய நுண்ணறிவு பிரிவு விழுப்புரம் மண்டலம், (II) கி.மகாமார்க்ஸ், தலைமை காவலர்-1989, விழுப்புரம் தாலுகா சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையம், விழுப்புரம் மாவட்டம், (iii) க.கார்த்திக், தலைமை காவலர்-2963, துறையூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, திருச்சி மாவட்டம், (iv) கா.சிவா, இரண்டாம் நிலை காவலர்-1443, ஆயுதப்படை சேலம் மாவட்டம் மற்றும் (v) ப.பூமாலை, இரண்டாம் நிலை காவலர் 764, ஆயுதப்படை, சேலம் மாவட்டம் ஆகியோருக்கு 2024-ம் ஆண்டுக்கான காந்தியடிகள் காவலர் விருது வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

TN-Govt

இவ்விருது தமிழ்நாடு முதல்வரால் 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ம் நாள் குடியரசு தினத்தன்று வழங்கப்படும். இவ்விருதுடன் பரிசுத்தொகையாக ரூ.40,000/- ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web