அடிக்கடி ஆண் நண்பருடன் உரையாடல்.. தாய் கண்டித்ததால் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை!

 
MM nagar

சிங்கப்பெருமாள் கோவில் அருகே தாய் கண்டித்ததால் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே அனுமந்தபுரம் கிராமத்தில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் நேற்று மாலை இளம்பெண் ஒருவர் இறந்த நிலையில் பிணமாக மிதந்து கொண்டிருப்பதாக மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மறைமலைநகர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் பிணமாக மிதந்து கொண்டிருந்த இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Dead-body

பின்னர் இறந்துபோன இளம்பெண் யார் என்பது குறித்து மறைமலைநகர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அனுமந்தபுரம் முள்ளேரி பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன். தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பத்மா. இவர்களது மூத்த மகள் தீபிகா (18). இவர் மகேந்திரா சிட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் தீபிகா அடிக்கடி ஆண் நண்பருடன் செல்போனில் பேசி வந்ததாக தெரிகிறது. இதனை கண்ட தாய் அவரை கண்டித்தார். இதில் தாய் - மகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபம் அடைந்த தீபிகா வீட்டில் இருந்து வெளியே சென்றதாக தெரிகிறது.

Maraimalai Nagar PS

இதனால் தீபிகா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது அவரை கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்தார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web